ஹிமாலய வெற்றிரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினிக்கும், நெல்சனுக்கும் எதிர்பார்த்த வெற்றியை இப்படம் தேடி தந்து அவர்களை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜெயிலர் படத்தால் 250 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன
பரிசுஜெயிலர் படத்தின் வெற்றியினால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதன் வெளிப்பாடாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கும், நெல்சனுக்கும் பரிசுகளை வாரி வழங்கியுள்ளார். ரஜினிக்கும் நெல்சனுக்கும் விலையுர்ந்த காரை பரிசாக கொடுத்த கலாநிதிமாறன் காசோலையையும் கொடுத்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் வரலாற்றிலேயே அதிக லாபம் கொடுத்த படமாக ஜெயிலர் மாறியுள்ளது. இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கலாநிதிமாறன் ரஜினியின் நடிப்பில் மேலும் ஒரு படத்தை தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன
லைன் அப்ஸ்ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினி போலீசாக நடிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைவர் 170 படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கின்றார். குறிப்பாக இப்படம் தான் ரஜினியின் கடைசி திரைப்படம் என தகவல்கள் பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது
குட் நியூஸ் சொன்ன ரஜினிகடந்த சில மாதங்களாக ரஜினி தலைவர் 171 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என பலர் பேசி வந்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின் படி ரஜினி தலைவர் 171 படத்திற்க்கு பிறகும் நடிப்பை தொடருவார் என செய்திகள் வருகின்றன. ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் தன் மார்க்கெட்டை உயர்த்தியுள்ள ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க இருக்கிறாராம். மேலும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரஜினி நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பார் என வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது