இந்தியா – நேபாளம் மோதும் ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு..! ஆட்டம் ரத்தானால் யாருக்கு அடுத்த சுற்று வாய்ப்பு ?

பல்லாகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்லகெலெவில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை பல்லகெலெவில் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.