பாலக்காடு,குருவாயூர் கிருஷ்ணருக்கு காணிக்கையாக, பக்தர் ஒருவர், 38 சவரனில் தங்கக்கிரீடம் வழங்க உள்ளார்.
கேரளாவின் பிரசித்தி பெற்றது குருவாயூர் கிருஷ்ணர் கோவில்.
இக்கோவில் மூலவருக்கு, காணிக்கையாக சமர்ப்பணம் செய்ய, 14.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 38 சவரன் எடை கொண்ட தங்கக்கிரீடத்தை, கோவையில் தங்க நகை தயாரிப்பு பணி செய்பவரும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவருமான ராஜேஷ் ஆச்சாரியா என்பவர் தயாரித்துள்ளார்.
இந்த தங்கக்கிரீடத்தை, ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி நாளான, வரும் 6ம் தேதி மூலவருக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, இது போன்ற தங்கக்கிரீடம் காணிக்கையாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement