இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதவாதம் தொடர்பான மோதலால் பதற்றம் நிலவும் நிலையில், மொபைல் போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் கில்கிட் என்ற இடம் உள்ளது. சமீபத்தில் இங்கு நடந்த போராட்டத்தின் போது சன்னி மதகுரு, ஷியா குழு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பதிலுக்கு ஷியா மதகுருவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டங்களால் கில்கிட் – பல்திஸ்தான் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை இங்கு மொபைல் போன் மற்றும் இணையசேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.
இரு தரப்பு மதகுருக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், “மத பதற்றங்கள் ஏற்பட்டுள்ள கில்கிட் – பல்திஸ்தான் பகுதியில் அமைதி நிலவுகிறது.
இங்கு அமைதியை நிலைநாட்ட ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அடிப்படையற்றவை” என அந்நாட்டு இடைக்கால தகவல் அமைச்சர் முர்தாசா சோலங்கி நேற்று தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement