மதுரா : கிருஷ்ணர் அவதரித்த தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி, நாளை மறுநாள் மற்றும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நாளை மறுநாள் இரவு முழுதும் பூஜைகளும், 7ம் தேதி கொண்டாட்டங்களும் நடப்பது வழக்கம். இதையடுத்து, கிருஷ்ணர் பிறந்த உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வரும் 7ம் தேதி காலை 5:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்ககப்படுவதால், உடைமைகள், பொருட்களை வைக்க சிறப்பு அறைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவசர உதவிக்காக மருத்துவ சுகாதார மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் கோவிலில் கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக உள்ளூர் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார், விரைவு அதிரடி படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement