வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்கப் போவதாக வெளியான தகவல்களால், நான் ஏமாற்றம் அடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஜி-20 அமைப்பிற்கு நம் நாடு தலைமை வகிப்பதை ஒட்டி, ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு செப்.,9 மற்றும் 10 தேதிகளில் புதுடில்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது. மாநாட்டிற்காக ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு பதில், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் சீனா பிரதமர் லி கியாங் பங்கேற்கிறார் என சீனா அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் மூலம் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஜி 20 மாநாட்டை புறக்கணிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஏமாற்றம்
இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜி 20 மாநாடு நடக்கும் இந்தியாவுக்கான பயணத்தை மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாதது பற்றி கேட்டபோது நான் ஏமாற்றம் அடைந்தேன். மாநாட்டில் அவர் பங்கேற்காவிட்டால், விரைவில் சந்தித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement