டெக் உலகில் நாளுக்கு நாள் புதிய மொபைல் போன்கள் வெளியாகி வருகின்றன. எந்த இடத்தில் சென்று எந்த மொபைலை வாங்குவது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை கண்டுபிடிப்பது பலருக்கும் கடினமான ஒன்று. அதற்காகவே சமீபத்தில் வெளியான மூன்று முக்கிய நிறுவனங்களின் மொபைல்களான iQoo Z7 , Realme 11 Pro மற்றும் Redmi note 12 pro ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் இந்த தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ப்ராசஸர்சமீபத்தில் வெளியாகியுள்ள iQoo Z7 மொபைலில் 8GB LPDDR4X ரேமுடன் கூடிய octa-core 4nm MediaTek Dimensity 7200 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. இதே Realme 11 Proல் Dimensity 7050 5G ப்ராசஸரும் , Redmi note 12 pro மாடலில் MediaTek Dimensity 1080 ப்ராசஸரும் பொறுத்தப்பட்டுள்ளன.
கேமராiQoo Z7 Pro 5G – ல் 64 மெகாபிக்ஸல் சாம்சங் GW3 பிரைமரி ரியர் சென்சார், 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா மற்றும் 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதே, Realme 11 Proல் OIS வசதியோடு கூடிய 100 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா 2 மெகாபிக்ஸல் போர்ட்ரைட் கேமரா மற்றும் 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. Redmi note 12 pro மாடலில் OIS வசதியோடு கூடிய 50 மெகாபிக்ஸல் Sony IMX766 சென்சார் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் கேமரா, 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா மற்றும் 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
டிஸ்பிளேiQoo Z7 Pro 5G மொபைலில் 6.78-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. Realme 11 Proல் 6.7-இன்ச் FHD+ (2412 x 1080 ரெசல்யூஷன்) Curved Vision டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி இடம்பெற்றுள்ளது. Redmi note 12 pro மொபைலில் 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரிiQoo Z7 Pro 5G மொபைலில் 4,600mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. Realme 11 Proல் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 66W SUPERVOOC சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. Redmi note 12 pro மொபைலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 66W டர்போ சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நிறம் மற்றும் வேரியண்ட்iQoo Z7 Pro 5G மொபைல் Graphite Matte, Blue Lagoon ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது. மேலும், 8GB + 128GB, 8GB + 256GB ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
Realme 11 Proவை பொறுத்தவரை, Sunrise Beige, Oasis Green, Astral Black ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது 8GB + 12GB, 128GB + 256GB ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
Redmi note 12 pro மாடல் Stardust Purple, Frosted Blue, Onyx Black ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இது 6GB + 128GB , 8GB + 128GB , 8GB + 256GB ஆகிய 3 வேரியண்ட்டுகளில் வெளியாகி உள்ளது.
விலைiQoo Z7 Pro 5G மொபைல் ரூ.23,999 மற்றும் ரூ.24,999 விலைக்கும் விற்பனை ஆகி வருகிறது. அதே சமயம் Realme 11 Pro ரூ.23,999 மற்றும் ரூ.24,599 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருகிறது. Redmi note 12 pro மாடலின் விலையை பொறுத்தவரை ரூ.29,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.