பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஒரு சில ஆண்டுகளாக தொடர் தோல்வியில் இருந்த ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் மிப்பெரிய வெற்றியை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பினார். இதையடுத்து அட்லீயின் இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பல தமிழ் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஷாருக்கானின் ட்வீட்
எனவே ஜவான் என்னதான் பாலிவுட் படமாக இருந்தாலும் இப்படத்தை ஒரு தமிழ் படமாகவே தமிழ் ரசிகர்கள் கருதுகின்றனர். ஷாரூக்கானும் தமிழில் பிரபலமான நடிகர் என்பதால் இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளது.
பக்கா கமர்ஷியல் படமாக ஜவான் உருவாகியுள்ளது ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகின்றது. இந்த எதிர்பார்ப்பின் காரணமாக ஜவான் படத்தின் முன்பதிவும் அமோகமாக இருந்து வருகின்றது. இதுவரை ஜவான் திரைப்படம் முன்பதிவின் மூலம் மட்டும் 25 கோடி வரை வசூலித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜவான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகின்றனர்.
அஜித்தை சந்திக்க ஆசை
ட்ரைலர் வெளியீடு, இசை வெளியீடு என செம பிசியாக இருந்து வருகின்றது படக்குழு. அந்த பிஸியான சூழலிலும் ஷாருக்கான் ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாடுவதை தவறாமல் செய்துள்ளார். வழக்கமாக ஷாருக்கான் அவ்வப்போது ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவார். அதுபோல நேற்று ரசிகர்களின் பல கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார்.
அந்த வகையில் ஒரு ரசிகர், தமிழ்நாட்டிற்கு மீண்டும் எப்போ வருவீங்க ? தமிழ் நடிகர்களை மீட் பண்ணீங்களா ? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், ரஜினி மற்றும் விஜய்யை நேரில் சந்தித்தேன். அஜித்தை சந்திக்கலாம் என இருந்தேன். ஆனால் மிஸ் செய்துவிட்டேன், விரைவில் அஜித்தையும் சந்திப்பேன் என்றார் ஷாருக்கான்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த ட்வீட் தான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்நிலையில் நேற்று ட்விட்டரில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியானது. இத்தனை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாகி வந்த நிலையில் தற்போது அஜித்தை பற்றி ஷாருக்கான் பதிவிட்ட பதிவையும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.