இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று (03) மாலை ஆறு மணிவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 200,026 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழிலுக்காக சென்ற ஆண்டாக கடந்த வருடம் பதிவாகியிருந்ததுடன், அந்த வருடத்தில் மூன்று இலட்சத்து பதினோராயிரம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.
இந்த ஆண்டில் வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.