Xiaomi 13T Pro மாடல் செப்டம்பர் 16ம் தேதி வெளியாகலாம் என்று சமீபத்தில் டிப்ஸ்டர்கள் இணையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். 6.67இன்ச் டிஸ்பிளே , MediaTek DM9200+ ப்ராசஸர், 120W சார்ஜிங் வசதி, இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து டிப்ஸ்டர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்துள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Xiaomi 13T Pro-ல் ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Xiaomi 13T Pro மொபைலில் அதிநவீன MediaTek Dimensity 9200+ ப்ராசஸர் இடம்பெறலாம் என்று டிப்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் , 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி , 16GBரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ், 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய மூன்று வேரியண்ட்டுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
கேமரா வசதிகள்Xiaomi 13T Pro-ல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பின்புறம் OIS வசதியுடன் கூடிய Sony IMX707 சென்சார் 50 மெகாபிக்ஸல் கேமரா , 13 மெகாபிக்ஸல் Omnivision OV138 அல்ட்ரா வைட் கேமரா, 50 மெகாபிக்ஸல் Omnivision OV138 டெலிபோட்டோ கேமரா ஆகியவை இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம், Sony IMX596 சென்சாருடன் கூடிய 20 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Xiaomi 13T Pro டிஸ்பிளே6.67 இன்ச் 1.5K OLED டிஸ்பிளே 144Hz ரெஃப்ரஷ் ரேட் 1200p ரெசல்யூஸன் வசதியோடு இடம்பெறலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனுடன் HDR10+ சப்போர்ட் வசதியும் இடம்பெற்றுள்ளது என்று டிப்ஸ்டர்கள் கூறியுள்ளனர்.
பேட்டரி திறன் மற்றும் நிறங்கள்Xiaomi 13T Proல் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 120W வேகமான சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். மேலும், இந்த மாடல் கிளாசிக் பிளாக் மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் வெளியாகலாம் என்றும் டிப்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.