பாபட்லா: ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில், குண்டூர் – கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சந்தமாகுலூரு எனும் இடத்தில், ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டல் தொழிலாளர்களான 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநரின் அதிவேகமே கோர விபத்துக்கு காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாபட்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.