உலகின் மிக முக்கியமான ஐடி சந்தையாக இந்தியா திகழ்கிறது. உலகமயமாக்கல் தொடங்கிய பிறகு பல்வேறு நாடுகளும் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் குவிக்க தொடங்கின. அந்த வகையில் நம் நாட்டில் இல்லாத சர்வதேச ஐடி நிறுவனங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. 90களுக்கு பின்னர் பெருநகரங்களில் ஐடி நிறுவனங்கள் பலவும் தடம் பதித்தன. அந்த வகையில் ஐடி ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது என்று கேட்டால் கர்நாடகா தான்.
பெங்களூரு நகரம்நடப்பாண்டில் மட்டும் 53 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஐடி ஏற்றுமதி காணப்படுகிறது. இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமெனில் 3.95 லட்சம் கோடி ரூபாய். இதில் பெங்களூரு நகருக்கு மிக முக்கிய பங்குண்டு. நாட்டின் மிகப்பெரிய டெக் ஹப் (Tech Hub) என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த ஐடி ஏற்றுமதியில் பெங்களூருவின் பங்கு 38 சதவீதம். இதன் மதிப்பு 45 பில்லியன் டாலர். நேரடியாக 10 லட்சம் பேரும், மறைமுகமாக 30 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.டெலாய்ட் இந்தியா & நாஸ்காம் ஆய்வறிக்கைஇந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்றால் அது பெங்களூரு தான். அந்த அளவிற்கு ஐடி நிறுவனங்களும், வேலைவாய்ப்பும் கொட்டி கிடக்கின்றன. குறிப்பாக ஸ்டார்ட் டப் நிறுவனங்களின் தலைநகராக திகழ்கிறது. இங்கு 44 சதவீதத்திற்கும் மேலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்நிலையில் பெருநகரங்களை தாண்டி இரண்டாம் நிலை (Tier 2) நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள் நகரத் தொடங்கி விட்டதாக டெலாய்ட் இந்தியா மற்றும் நாஸ்காம் ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கர்நாடகாவில் 3 நகரங்கள்இந்த ஆய்வின் படி, அடுத்த ஐடி ஹப்பாக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ள நகரங்கள் என்று 26 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் லக்னோ, போபால், ஜெய்ப்பூர், சண்டிகர், ராஞ்சி, கவுகாத்தி, புவனேஸ்வர், விஜயவாடா, மதுரை, திருச்சி, கோவை, மைசூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் எடுத்துக் கொண்டால் ஹூப்ளி, மங்களூரு, மைசூரு ஆகிய மூன்று நகரங்கள் அடுத்த ஐடி ஹப்பாக மாறவுள்ளன. இந்த ஆய்வு முடிவுகளை உற்றுநோக்கிய ஐடி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இறக்க தயாராகி வருகின்றன.
சம்பளமும், ரியல் எஸ்டேட் மதிப்பும்டயர் 2 நகரங்களை தேர்வு செய்தால் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. ஏனெனில் ஊழியர்களுக்கான சம்பளம் என்பது பெருநகரங்களை காட்டிலும் 25 முதல் 30 சதவீதம் வரை குறைவாக வழங்க முடியும். நிலத்தின் மதிப்பு 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சிறு நகரங்களில் இருந்து திறமையான ஊழியர்கள் ஏராளமாக கிடைப்பது ஐடி நிறுவனங்களுக்கு வரப் பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
டயர் 2 நிறுவனங்கள்இந்தியாவில் உயர்கல்வி கற்பவர்களில் 60 சதவீதம் பேர் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தான் தேர்வு செய்கின்றனர். இவர்களை பட்டை தீட்டி ஐடி துறைக்கு ஏற்ப எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இனிமேல் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களை நோக்கி தான் நகரும் என்று வல்லுநர்கள் பலரும் அடித்து கூறுகின்றனர்.
உள்கட்டமைப்பு வசதிகள்அந்த அளவிற்கு பெருநகரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன. இவ்வாறு இரண்டாம் நிலை நகரங்களை நோக்கி ஐடி நிறுவனங்கள் படையெடுப்பதால் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் மேம்படும். ஒட்டுமொத்த வளர்ச்சி வேற லெவலுக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.