Hyundai Venue gets ADAS – 2023 ஹூண்டாய் வென்யூ ADAS நுட்பத்துடன் விற்பனைக்கு வெளியானது

டிரைவர்களுக்கான அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் ADAS நுட்பத்தை பெற்ற ஹூண்டாய் வென்யூ மற்றும் வென்யூ N லைன் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.10.32 லட்சம் முதல்ரூ.13.33 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் (SmartSense) என்ற பெயரில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (advanced driver-assistance system – ADAS) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ADAS நுட்பம் வென்யூ 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என இரண்டில் வந்துள்ளது.

Hyundai Venue gets ADAS tech

ஹூண்டாய் வென்யூ காரில் ADAS நுட்பத்தின் மூலம் கிடைக்கின்ற வசதிகள் பின்வருமாறு, முன்புற மோதல் எச்சரிக்கை, முனபறத்தில் வாகன மோதல் தவிர்க்க உதவி, லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் மாறும் பொழுது எச்சரிக்கை, ஓட்டுனர் கவனத்தை கண்காணித்து எச்சரிக்கை, லேன் ஃபாலோ அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் முன்னே செல்லும் வாகனத்தை கண்கானித்து எச்சரிக்கை வசதி ஆகியவற்றைப் பெறுகிறது.

120 HP பவரை வழங்கும் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ (மேனுவல்) மற்றும் லிட்டருக்கு 18.15 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.

வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. வென்யூ 1.2 லிட்டர் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 17.52 கிமீ (மேனுவல்).

Hyundai Venue ADAS price list

Engine option Variant Ex-showroom prices
1.0-litre turbo petrol S (O) MT Rs. 10.32 lakh
SX (O) MT Rs. 12.44 lakh
SX (O) MT dual tone Rs. 12.59 lakh
SX (O) DCT Rs. 13.23 lakh
SX (O) DCT dual tone Rs. 13.38 lakh
1.5-litre diesel SX (O) MT Rs. 13.18 lakh
SX (O) MT dual tone Rs. 13.33 lakh

Hyundai Venue N Line ADAS price list

Variants Ex-showroom price
N6 MT Rs. 11,99,900
N6 MT dual-tone Rs. 12,14,900
N8 MT Rs. 12,95,900
N8 MT dual-tone Rs. 13,10,900
N6 DCT Rs. 12,79,500
N6 DCT dual-tone Rs. 12,94,500
N8 DCT Rs. 13,74,800
N8 DCT dual-tone Rs. 13,89,800

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.