தமிழ் திரையுலகில் தனது நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர்தான் நடிகை சமந்தா. இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். அவரது வசீகர சிரிப்புக்கும், இயல்பான நடிப்பிற்கும் ரசிகர்கள் ஏராளம். பல படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு, சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று தனது சினிமா வாழ்வுக்கு பிரேக் விடுத்துள்ளார்.
குஷி நாயகி சமந்தா
செப்டம்பர் 1, குஷி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னும், ரிலீஸ் ஆனா பின்னும், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை மிகவும் துரிதமாக செய்து வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில், சமந்தா நியூ யார்க்கில் ஓய்வெடுத்த படியே, படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை செய்துவருகிறார். ஹீரோ விஜய், இங்கு ப்ரோமோஷன் வேலைகளை செய்து வருகிறார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமந்தா, காதலித்து நாகா அர்ஜுனின் மகனான நாக சைதன்யாவை கடந்த 2017இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்களும், இவர்களின் திருமணத்தை கொண்டாடினார்கள். திருமணமான 4 ஆண்டுகளில், 2021ல் இவர்கள் பிரியப்போவதாக அறிவித்து, சட்டப்படி பிரிந்தனர். ரசிகர்களால் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நாகா அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
இந்நிலையில், நேற்று குஷி படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா நாகா அர்ஜுன் தொகுக்கும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்றுதான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் நாகா அர்ஜுனிடம் பேசினார். அப்போது, விஜயை வரவேற்ற நாகா அர்ஜுன் படத்தின் கதாநாயகி எங்கே என கேட்டார். அதற்கு விஜய், சமந்தா அமெரிக்காவில் ப்ரோமோஷன் வேலைகளை பார்த்துக்கொண்டே ஓய்வெடுப்பதற்காக கூறினார்.
சமந்தா மற்றும் நாகா அர்ஜுன்
ஜவான் படத்தை ரிஜெக்ட் செய்தாரா சமந்தா ?? காரணம் இதோ !
இந்த கேள்வி பலரையும் உலுக்கியது. தனது மகனின் முன்னாள் மனைவி என்ற ஈகோ இல்லாமல், சமந்தாவை அவர் விசாரித்தார். மேலும், “நீங்களும் நல்ல நடிகர், சமந்தாவும் நல்ல நடிகை, இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பீர்கள், யாரை யார் டாமினேட் செய்து நடித்தீர்கள் ?” எனக் கேட்டார். அதற்கு தான் முயற்சி செய்ததாக கூறினார் விஜய் தேவரகொண்டா. நாகா அர்ஜுனின் இந்த செயல் பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. எந்த ஈகோவும் இல்லாமல், சக நடிகையாக அவரைக் கேட்டதுதான், தெலுங்கு திரையுலகில் பேசுபொருளாக உள்ளது.
Guest Author : Radhika Nedunchezhian