பல்லகெலெ,
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் இருவரும் முறையே 38 மற்றும் 58 ரன்கள் குவித்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
நேபாளம் 37.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திபேந்திர சிங் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது சோம்பால் கமி 27 ரன்களுடனும் சந்தீப் லாமிச்சானே 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 44 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு நேபாளம் 202 ரன்கள் எடுத்துள்ளது.