எதே.. தலைய வெட்டப் போறியா.. "தண்டவாளத்திலேயே தலையை வைக்கிறவங்க நாங்க".. மாஸ் காட்டிய உதயநிதி

சென்னை:
சனாதனம் பற்றி பேசியதற்காக தனது தலையை வெட்டிக் கொண்டு வர சொன்ன உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என உத்தரபிரதேசத்தில் பரமஹன்ச ஆச்சார்யா என்ற ஒரு சாமியார் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தனது தலையை கொண்டு வரக் கூறிய சாமியாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இன்னைக்கு இந்தியா முழுக்கவே என்னை பற்றிதான் பேசிட்டு இருக்காங்க. காரணம் சனாதனம். அமித் ஷா முதல் நட்டா வரை இதை பற்றிதான் பேசிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க என் மீது புகார் கொடுத்துட்டு இருக்காங்க. இவங்க எல்லாத்துக்கும் மேல ஒரு சாமியார் சொல்லிருக்காரு. என் தலையை கொண்டு வந்தா 10 கோடி ரூபாய் தருவாராம்.

என் தலை மேலே அப்படி என்ன உனக்கு ஆசை? நீ சாமியார் தானே. அப்புறம் எப்படி உன்ட்ட 10 கோடி இருக்கு. நீ உண்மையான சாமியாரா டூப்ளிகேட் சாமியாரா? என் தலைய சீவ எதுக்கு 10 கோடி?10 ரூபா சீப்பை கொடுத்தால் நானே சீவிக்குவேனே. தமிழுக்காக தண்டவாளத்தில் தலையை வைத்த கருணாநிதியின் பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.