ஜெயிலர் வெற்றிக்கு காரணம் கமல் ஃபார்முலா: ரஜினிக்கு வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் புதுப்புது சாதனைகள் படைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக இருக்கிறது ஜெயிலர்.

டைகர் முத்துவேல் பாண்டியனை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு இன்னும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் படம் ரிலீஸான நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூட ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.

அடங்குற ஆளா ஜெயிலர்!, 4வது ஞாயிற்றுக்கிழமையில் கூட மாஸ் வசூல்: எத்தனை கோடினு தெரியுமா?

உலக அளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது ஜெயிலர். இதனால் ஜெயிலரை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியில் இருக்கிறது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகரான ஜாக்கி ஷ்ராஃப் இருந்தது பலமாக அமைந்துவிட்டது. இப்படி பல பிரபலங்களை ஜெயிலரில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஐடியாவை நெல்சன் திலீப்குமாருக்கு கொடுத்ததே ரஜினி தான்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான விக்ரம் படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். தனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என கமல் ஹாசன் நினைக்கவில்லை. அந்த பார்முலா விக்ரமுக்கு பயங்கரமாக ஒர்க்அவுட் ஆனது.

கமல் ஹாசனின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது விக்ரம். அதை பார்த்துவிட்டு தான் ஜெயிலர் படத்திலும் பிற பிரபலங்களை நடிக்க வைக்கும் ஐடியா ரஜினிக்கு வந்தது.

ரஜினி இருக்கும்போதே அவருக்கு முன்பே மாஸ் காட்டிவிட்டார் சிவராஜ்குமார். அவர் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்த போதிலும் ரசிகர்கள் ஷிவாண்ணாவை கொண்டாடினார்கள். அந்த கிளைமாக்ஸுக்காகவே கர்நாடகாவில் ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

கமலின் மல்டி ஸ்டாரர் ஃபார்முலா அவரை விட ரஜினிக்கு தான் வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகிவிட்டது. நண்பரை பார்த்து ஜெயிலரில் ரஜினி செய்த மாற்றம் அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. விக்ரமை விட அதிகம் வசூல் செய்துவிட்டது ஜெயிலர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலரை அடுத்து தலைவர் 170 படத்திலும் சோலோவாக வராமல் பிற பிரபலங்களை தன்னுடன் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த். அவரின் கணக்கு நிச்சயம் தப்பாகாது என்று நம்பப்படுகிறது.

ஜெய்பீம் எனும் வெற்றிப்படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் இன்னும் இரண்டு வாரத்தில் துவங்கவிருக்கிறது. வில்லத்தனம் செய்வதற்கு பெயர் போன ஃபஹத் ஃபாசில் அந்த படத்தில் நடிக்கிறார்.

நயன்தாரா இன்ஸ்டாவில் சேர்ந்ததும் இந்த சினிமா பிரபலத்தை தான் முதலில் ஃபாலோ செய்தார்

ஜெயிலரில் மலையாள நடிகரான விநாயகன் வில்லனாக நடித்தார். இதையடுத்தே ஜெயிலரை போன்றே தலைவர் 170 படத்திலும் மலையாள நடிகர் தான் வில்லனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறாராம் ரஜினிகாந்த்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.