Volvo C40 Recharge – ₹61.25 லட்சத்தில் வால்வோ சி40 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலை அடிப்படையாக கொண்ட C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரில்  78kWh பேட்டரி பேக் மூலம் அதிகபட்சமாக 530km பயணிக்கலாம் என WLTP முறையில் அல்லது 683km ICAT முறையில் சிங்கிள் சார்ஜ் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை பெற்றிருந்தாலும், பின்புறத்தில் கூபே ஸ்டைல் மாடலுக்கு இணையான மாற்றத்தை பெற்றுள்ளது. பின்புறத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட் அமைப்பு உள்ளது.

Volvo C40 Recharge

நான்கு சக்கர டிரைவ் பெற்று இரண்டு 201 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டாரில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளன. அவை இணைந்து அதிகபட்சமாக 408hp பவர் மற்றும் 660 Nm டார்க்கை வழங்குகின்றன. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை அடைய 4.9 விநாடிகள் தேவைப்படுகின்றது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

78kwh  பேட்டரியிலிருந்து சக்தியை பெறும் சி40 காரின் ரேஞ்சு 534 கிமீ கிடைக்கும் என WLTP மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ICAT முறையில் 638km வரை ரேஞ்சு கிடைக்கும். 11Kwh ஏசி சார்ஜர் அல்லது 150Kwh டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யலாம். 150Kwh டிசி சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும்போது வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் ஆகும் திறனை பெறும்.

9.0-இன்ச் போர்ட்ரெய்ட் ஸ்டைல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், டேஷ்போர்டில் மர வேலைப்பாடுகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வோல்வோவிடமிருந்து எதிர்பார்ப்பது போலவே சிறப்பாக உள்ளது.

வால்வோ C40 ரீசார்ஜ் மின்சார காரினை வால்வோ டீலர்கள் மட்டுமல்லாமல் வால்வோ இணையதளத்திலும் வாங்கலாம். செப்டம்பர் 5, 2023 ஆம் தேதி மாலை 5 மணி முதல் volvocars.com/in/ தளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

அறிமுக சிறப்பு சலுகை விலை Volvo C40 Recharge ₹ 61.25 லட்சம்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.