வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
ஜி20 உச்சி மாநாடு வரும் செப்., 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் செப்.,7-ம் தேதி இந்தியா வருகிறார். ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பைடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு(வயது 72) கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது, ஜில் பைடன் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜில் பைடனுக்கு கோவிட் உறுதியாகி, பின்னர் குணம் அடைந்தார்.
தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஜோ பைடக்கு கோவிட் சோதனை செய்த போது கோவிட் தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement