சனாதன ஒழிப்பு மாநாடு
சென்னை காமராஜர் அரங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் எதிர்க்கக்கூடாது, ஒழித்துதான் ஆக வேண்டும், அதே போலத்தான் இந்த சனாதனமும் என்ற உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நல்லது என்றார்.
ரூ.10 கோடி சன்மானம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளார்.
எதிர்ப்பு
டெல்லி பாஜக, மகாராஷ்டிரா அரசு மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆதீனங்களை ஆட்சியாளர்கள் தேடி வருகின்றோம்-அமைச்சர் சேகர்பாபு பேட்டி..
சேகர் பாபு விளக்கம்
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு சனாதனம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளித்தேரை அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் ஆர் காந்தி ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
வாழைப்பழத் தோல்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்துமதம் என்பது வாழைப்பழம் என்றும், சனாதனம் என்பது வாழைப்பழத் தோல் என்று விளக்கம் அளித்தார். மேலும் தோலை நீக்கிவிட்டு தான் பழத்தை உண்பார்கள் என்ற அமைச்சர் சேகர் பாபு, சனாதனத்தின் தேவையில்லாத பகுதியை எதிர்ப்பதுதான் தங்களின் கொள்கை என்றும் கூறினார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
அண்ணாமலை எச்சரிக்கை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். செப் 10 ஆம் தேதிக்குள் சேகர் பாபு பதவி விலகாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.