சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் இனியாவின் ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக தற்போது கேரளாவிற்கு ரோட் ட்ரிப் சென்றுள்ளனர் பாக்கியா, இனியா, ஈஸ்வரி மற்றும் செல்வி. டிரைவருடன் துவங்கிய இவர்களது பயணத்தில், அவர் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் இடையிலேயே சென்றுவிட, பாக்கியா தற்போது காரை ஓட்டுகிறார்.