HBD H.Vinoth: கோயம்பேடு மார்க்கெட் முதல் தமிழ் சினிமா மார்க்கெட் வரை..H .வினோத் பற்றி அறியாத பல தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் தான் H .வினோத். இவரின் படங்களை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வந்தாலும் இவரின் குணத்தையும், சமூகம் மீதான இவரின் பார்வையையும் ரசிகர்கள் மிகவும் ரசிக்கின்றனர். துணிவு படம் வெளியான போது H .வினோத் ஊடகங்களுக்கு பல பேட்டிகள் கொடுத்தார். அப்போது தான் வினோத் என்பவர் யார் ? சமூகத்தின் மீது அவரின் பார்வை என்ன என்பது பலருக்கு தெரியவந்தது. சமூகத்தை வித்யாசமான பார்வையில் பார்க்கும் மனிதரான வினோத் அவர்கள் இன்று தன பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் அவரின் திரைப்பயணம் பற்றியும், அவரை பற்றி தெரியாத பல தகவல்கள் பற்றியும் இங்கு பார்ப்போம்

கல்லூரி படிப்பை படித்து முடித்த பிறகு வெளிநாட்டில் வேலை செய்யவேண்டும் என்பது தான் வினோத்தின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதற்கான குடும்ப சூழல் இல்லாத காரணத்தால் இங்கேயே ஏதேனும் வேலை கிடைக்குமா என தேடி வந்தார். அந்த சமயத்தில் ஒரு பூதோட்டத்தில் வேலை செய்ய துவங்கினார் வினோத். அப்போது அங்கு அவருக்கு ஓய்வு நேரங்கள் நிறைய இருந்தன. அந்த நேரத்தில் எல்லாம் வினோத் புத்தகங்களும், செய்தி தாள்களையும் அதிகம் வாசிக்க துவங்கினார். அதுதான் அவர் சினிமா துறைக்கு வர ஆரம்பப்புள்ளியாக இருந்தது

வினோத்தின் திரைப்பயணம்

அதன் பிறகு சினிமாவில் சேரலாம் என முடிவெடுத்த வினோத் பல போராட்டங்களுக்கு பிறகு பார்த்திபன் அவர்களின் உதவி இயக்குனராக சேர்ந்தார். இயக்குனராக சேர்ந்து தொழிலை கற்றுக்கொள்ள நினைத்த வினோத் தன் பொருளாதார தேவைக்காக கோயம்பேடு மார்க்கெட்டிலும் வேலை செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் ராஜு முருகனின் பழக்கம் வினோத்திற்கு ஏற்பட்டது. அவரின் உதவி இயக்குனராக ஒரு படத்தில் பணியாற்றினார் வினோத். ஆனால் அந்த படம் இதுவரை வெளியாகவே இல்லை. இதைத்தொடர்ந்து ராஜு முருகன் மூலமாக இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கோலி சோடா படத்தில் பணியாற்றினார் வினோத்

Thalapathy68 update: தளபதி 68 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோவா ? இன்னும் எத்தனை பேர் இருக்காங்கனு தெரியலையே..!

கோலி சோடா படத்திற்கு பிறகு தான் வினோத்திற்கு சினிமாவின் மீது ஒரு தெளிவு கிடைத்துள்ளது. அதன் பிறகு தான் படித்த செய்தி தாள்களை வைத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சதுரங்க வேட்டை என்ற படத்தின் கதையை தயார் செய்தார் வினோத். அந்த கதையை படமாக எடுத்து வெற்றி கண்ட பின்னர் வினோத் தன் திரைவாழ்க்கையில் திரும்பி பார்க்கவே இல்லை எனலாம்

அறியாத தகவல்கள்

பொதுவாக வினோத்திற்கு ஆடம்பரம் என்றாலே பிடிக்காதாம். மிகவும் எளிமையாகவே இருப்பார். மேலும் அவர் இன்றுவரை ஸ்கூட்டரில் தான் பயணம் செய்து வருகிறாராம். அவருக்கு கார் மற்றும் பைக் ஓட்ட தெரியாதாம். பணம், புகழ் எதற்கும் ஆசைப்படாத வினோத் சமூக தளங்களில் இருந்து விலகியே இருக்கின்றார். ஓய்வு நேரங்களில் படம் பார்ப்பது மற்றும் புத்தகம் படிப்பது மட்டுமே அவர் செய்து வருகிறாராம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தனக்கு பிடித்த வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்துகொண்டு தன் படங்களின் மூலம் சமூகம் சார்ந்த கருத்துக்களை கூறி வரும் வினோத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.