புதிய தொழில் சட்ட மறுசீரமைப்புடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள தொழில் அற்றோருக்கான காப்புறுதி ,தாய் , சேய் நலன்கள் , பணியிடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற ஆலோசனைகளை செயல்படுத்துவதற்காக தற்போது இந்தோனேஷியாவில் செயல்படுத்தப்பட்டுவரும் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை ஆழமாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளது.
இந்த ஆய்வு நடவடிக்கை சர்வதேச தொழில் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜப்பான் அரசாங்கமும் இதற்கு பங்களிப்பு செய்துள்ளது.
இந்தோனேஷியாவில் தற்போது செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு கட்டமைப்பு முறை தொடர்பில் நீண்ட ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அதனை இலங்கையின் சூழலுக்கு ஏற்றவாறு முன்னெடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
தொழில் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறியும் தொடர் அமர்வுகளின் போது , வேலையின்மை காப்புறுதி, தாய் , சேய் நலன்கள், பணியிடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைவாக , இலங்கைக்கு ஏற்றது சமூகப் பாதுகாப்பு முறையைத் தயாரிப்பதற்காக, இந்தோனேஷியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு முறையை ஆராய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கமைவாக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்படது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.பி.ஏ. விமலவீர தலைமையில், தொழில் ஆணையாளர் நாயகம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பிரதிகளைக்கொண்ட குழு இந்தோனேஷியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பான BPJS Ketenagakerjaan யின் தலைவரும் பணிப்பாளருமான Anggoro Eko Cahyo திரு. அங்கோரோ எகோ கஹ்யோவையும் தூதுக்குழு சந்தித்து கலந்துரையாடியது. அதன் பொது மக்களுக்கான தினத்தன்று சென்ற பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் ,பல்வேறு இடங்களில் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளுக்கு பணிப்பாளர்கள் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்தது.
BPJS Ketenagakerjaan என்ற விரிவான சமூக பாதுகாப்பு தொடர் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பு கூறும் சமூக பாதுகாப்பு முகவர் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ள பொதுவான சட்ட நிறுவனமாகும்.
இந்த திட்ட வேலைத்திட்டத்தில் சுகாதார பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு, வேலையற்றவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு பாதுகாப்பு ஆகிய விடயங்கள் அடங்குகின்றன.
இந்த புரிந்துணர்வு விஜயம் ,இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஊக்குவிப்பை மேற்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது.