தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என பிரிக்கப்பட்டு, சென்னை மத்திய புழல் சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதுதவிர பெண்களுக்கு என தனி சிறையும் இருக்கிறது. புழல் சிறையில் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை சிக்குவது வாடிக்கை. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்குத் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள், செல்போன்கள் எப்படி கிடைக்கின்றன என்று சிறைத்துறையும், தமிழக போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக சிறைக்கைதிகளிடம் தனிப்படை போலீஸார் அடிக்கடி சோதனை நடத்துவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி தனிப்படையினர் சிறைக்கைதிகளின் அறைகளைச் சோதனை செய்தனர். அப்போது சென்னை முகப்பேரில் நகைக்கடை, சூப்பர் மார்க்கெட், நிதி நிறுவனம் என நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான ஆல்வின் என்பவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. அவரின் அறையிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், சில போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து இன்னும் சில கைதிகளின் அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் திருட்டு வழக்கில் கைதான சூர்யா என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிறைக்கைதிகள் சூர்யா, ஆல்வின் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, சிறைக்காவலர் திருமலை ராஜா நம்பி என்பவர் மூலம் இவர்களுக்கு கஞ்சா, போதைப்பொருள்கள் கிடைத்த தகவல் தெரியவந்தது. உடனடியாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறைத்துறை உயரதிகாரிகள் சிறைக்காவலர் திருமலை ராஜா நம்பியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். தொடர்ந்து கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் ஆறு கைதிகள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY