ரூ. 1 கோடி லஞ்சம் : கேரள முதல்வர் பினராயி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு| Rs. 1 crore bribe: Case against Kerala Chief Minister Pinarayi Vijayan in Kerala High Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: தாது மணல் நிறுவனத்திடம் ரூ. 1 கோடி லஞ்சம் பெற்றதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் , அவரது மகள் வீனா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீனா, இவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சி.எம்.ஆர்.எல். எனப்படும் கொச்சின் மினரல்ஸ் அன்டு ரூட்டைல்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ. 1கோடி 72 லட்சம் ரூபாய் தனது தந்தை சார்பில் லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. சட்டசபையில் எதி்ர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக கிரீஷ்பாபு என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாது மணல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க ரூ. 1கோடி லஞ்ச பணம் , மகள் வீனா மூலம் முதல்வருக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.