Thalapathy vijay: ரஜினி ,கமல் பார்முலாவை பின்பற்றும் விஜய்..முதல் இடத்தை பிடிக்க மாஸ்டர் பிளான் போடும் தளபதி..!

லோகேஷ் கனகராஜின் லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக தளபதி 68 படவேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது. இதையடுத்து இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் நவம்பர் மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாக கூடாது என விஜய் வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளார். அதன் காரணமாகவே தளபதி 68 படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகின்றனர். இருந்தாலும் தற்போது விஜய், வெங்கட் பிரபு தளபதி 68 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லால் அஞ்செல்ஸ் சென்றுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெங்கட் பிரபு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அது இணையத்தில் செம வைரலானது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தளபதி 68 படத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த தகவல் எல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தி வருகின்றது.

தளபதி 68 அப்டேட்

அதாவது இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கின்றார் என்ற ஒரு தகவல் கடந்த பல நாட்களாக பரவி வருகின்றது. இதுமட்டுமல்லாமல் இப்படம் ஒரு மல்டி ஸ்டாரர் படம் என்றும், இதில் சிம்பு, ஜெய், பிரியங்கா மோகன் என பலர் நடிப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பிரபுதேவா இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாகவும் பேசப்பட்டது.

இதையெல்லாம் தாண்டி தளபதி 68 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாக ஒரு சிலர் பேசி வருகின்றனர். இவ்வாறு பலர் விஜய்யுடன் இணைந்து நடித்தால் அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தகவல் எல்லாம் உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தான் தெளிவாக தெரியவில்லை. அந்த வகையில் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

விஜய்யுடன் இணையும் பிரஷாந்த்

என்னவென்றால் தளபதி 68 படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்க இருக்கிறாராம். 90 களில் முன்னணி நாயகனாக ஜொலித்து வந்த பிரஷாந்த் தற்போது ஒரு கம்பாக்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் தான் அவருக்கு விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் வழக்கம்போல இந்த தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை. இந்நிலையில் கமல் எப்படி விக்ரம் என்ற மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தாரோ அதே போல ரஜினியும் ஜெயிலர் என்ற மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்து வெற்றிகண்டார். தற்போது இவர்கள் இருவரின் பார்முலாவையும் விஜய் பின்தொடர்வதாக ரசிகர்கள் சிலர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.