நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் வாக்கில் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டின் இறுதி அல்லது தொடக்கத்தில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் விதமாக `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை, வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க அரசு அமல்படுத்தப்போவதாகக் கூறப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/png_20211220_144438_0000.png)
`ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம், தேர்தல் செலவு மிச்சம், மத்திய அரசின் திட்டங்களை மாநிலங்களுக்கு எளிதில் கொண்டுசெல்லலாம் என்று காரணம் கூறுகிறது பா.ஜ.க. மேலும், இதற்கென்று அவசர அவசரமாக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவையும் பா.ஜ.க அரசு அமைத்தது. ஆனால், குழு அமைக்கப்பட்ட அடுத்த நாளே, “இந்தக் குழு உருவாக்கம் ஒரு முழுமையான கண்துடைப்பு முறை. இந்த முயற்சி, நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாபெரும் அவமதிப்பு. இந்தச் சூழ்நிலையில், உங்கள் (பா.ஜ.க) அழைப்பை நிராகரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று கூறி குழுவிலிருந்து வெளியேறினார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி.
இவ்வாறான இரண்டுவிதமான விமர்சனங்களுக்கு இடையிலான சூழலில், `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து மக்களின் எண்ணவோட்டத்தை அறிந்துகொள்ளும் விதமாக, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_05_at_4_39_08_PM.jpeg)
கருத்துக்கணிப்பில், `ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வர தீவிரம் காட்டிவருகிறது மத்திய அரசு. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல்…’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `தேவை, தேவையில்லை, கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_05_at_4_39_10_PM.jpeg)
இந்த நிலையில் கருத்துக்கணிப்பின் முடிவின்படி, அதிகபட்சமாக 64 சதவிகிதம் பேர் `ஒரே நாடு ஒரே தேர்தல் தேவையில்லை’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 34 சதவிகித மக்கள் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ தேவை என்றும், 2 சதவிகித மக்கள் `கருத்து இல்லை’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மட்டுமல்லாது, பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, இந்தியாவின் பெயரை `பாரதம்’ என்று மாற்றுதல் போன்றவையும் விவாதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY