இலங்கை பங்கேற்கும் 2023 ஆசிய கிண்ணத்தின் முதல் சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (05) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற உள்ளது.
இந்த போட்டி பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் பகல் மற்றும் இரவு போட்டியாக பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் எளிதாக நுழைந்துவிடும்.
லாகூர் மைதானத்தில் இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றுள்ளதுடன், அந்த மைதானத்தில் முன்னதாக இலங்கை அணி பங்குபற்றிய 13 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 10 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் இலங்கை 6 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.