Rajinikanth: ஒரே வருடத்தில் ரஜினியின் மூன்று படங்கள் ரிலீஸ்..2024 ஆம் ஆண்டை டோட்டலாக புக் செய்த தலைவர்..!

ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு புது உத்வேகம் பெற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போதே ஜெயிலர் மீது ரஜினிக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது, இப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றெல்லாம் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன. அதைப்போலவே இப்படம் வெளியான பிறகு ஒட்டுமொத்த வசூல் சாதனைகளையும் முறியடித்து புது புது சாதனைகள் செய்து வருகின்றது.

விமர்சன ரீதியாகவம், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி தன் அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார் ரஜினி. இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற ரோலில் ரஜினி நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.

இதையடுத்து விரைவில் ஞானவேலின் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படப்பிடிப்பை துவங்கவுள்ளார் ரஜினி. இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் ஜெயிலர் படத்தை போலே இப்படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருக்கின்றதாம்.

HBD H.Vinoth: கோயம்பேடு மார்க்கெட் முதல் தமிழ் சினிமா மார்க்கெட் வரை..H .வினோத் பற்றி அறியாத பல தகவல்கள்..!

இந்நிலையில் இப்படத்தை அடுத்து ரஜினி லோகேஷின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கின்றார். என்னதான் இப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு லோகேஷ் இப்படத்தின் வேலைகளை துவங்கவுள்ளார். அநேகமாக அடுத்தாண்டு மார்ச் மாதம் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரே வருடத்தில் மூன்று படங்கள்

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினிக்கு 2024 ஆண்டு

மட்டும் மூன்று படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு அமைந்துள்ளது. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கின்றது. இதையடுத்து ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 திரைப்படம் ஜூன் அல்லது ஜூலையில் வெளியாகவுள்ளதாம். மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எனவே 2024 ஆம் ஆண்டு ரஜினியின் மூன்று படங்கள் திரையில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு ஒரே வருடத்தில் ரஜினியின் மூன்று படங்கள் வெளியாகவுள்ளதை எண்ணி அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.