புதுடில்லி :மருத்துவ சாதனங்களையும் மருந்துகள் பிரிவில் சேர்க்கும் மத்திய அரசின் அறிவிப்பாணைகளுக்கு தடை விதிக்கக் கோரும் வழக்கில் தலையிட, புதுடில்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மருத்துவ சாதனங்கள் சிலவற்றை மருந்துகள் பிரிவில் சேர்த்து, 2018ல் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.இதைத் தொடர்ந்து, 2020ல் வெளியிட்ட அறிவிப்பாணையில், அனைத்து மருத்துவ சாதனங்களும், மருந்துகள் பிரிவில் சேர்க்கப்பட்டன.இதை எதிர்த்து, மருத்துவ சாதனங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
மருத்துவ சாதனங்களை, மருந்துகள் பிரிவில் சேர்க்கும் நடவடிக்கை, மத்திய அரசின் கொள்கை முடிவாகும்.இதில் எந்தத் தவறும் நடந்ததாக கூறப்படவில்லை. இதுபோன்ற மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட் தலையிட முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement