செம பர்ஃபாமில் ஆதித்யா எல் 1… இஸ்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்!

ஆதித்யா எல்1

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை கடந்த 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திராயன் 3 விண்கலம் எப்படி நிலவை அடைந்ததோ அதுபோலவே ஆதித்யா எல்1 விண்கலமும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

சுற்றுவட்டப்பாதை அதிகரிப்பு

சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டதை போன்றே ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுப்பாதையும் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதல் முறையாக உயர்த்தப்பட்டது.

இந்து மதம் வாழைப்பழம்… சனாதனம் வாழைப்பழத்தோல்… சர்ச்சைக்கு நடுவே சேகர்பாபு விளக்கம்!

இரண்டாவது முறையாக

அந்தப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆதித்யா எல் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டளை மையத்தில் இருந்து ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்து எப்போது?

மொரீஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள ISTRAC/ISROவின் தரை நிலையங்கள் இந்த நடவடிக்கையின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் புதிய சுற்றுப்பாதை 282 கிமீ x 40225 கிமீ உள்ளது. மீண்டூம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சசிகலா, இளவரசிக்கு பிடி வாரண்ட்… பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
5 முறை உயர்த்தப்படும்

இதேபோல் ஐந்து முறை சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்ட பிறகு ஆதித்யா விண்கலம் பின்னர் சூரியனை நோக்கி பயணம் செய்யும். சுமார் 125 நாட்கள் பயணித்திற்கு பிறகு ஆதித்யா எல்1 விண்கலம் லாக் ரேஞ்ச் பாயிண்ட் 1 என்ற இடத்தை அடையும். அதன்பிறகு இஸ்ரோவின் திட்டத்தின்படி ஆதித்யா எல் 1 விண்கலம் தனது ஆய்வு பணிகளை தொடங்க உள்ளது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.