iPhone 15 : ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு கிடைக்க போகும் 10 புதிய ஃபீச்சர்கள்!

செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஐவாட்ச் ஆகியவை வெளியாக உள்ளது. அதோடு சேர்த்து பல்வேறு புதிய அப்டேட்டுகளும் இந்த மொபைல்களில் வர இருக்கின்றன. குறிப்பாக iOS 17 அப்டேட்டும் இதில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, என்ன புதிய அப்டேட்டுகள் இந்த மொபைல்களில் வர இருக்கிறது, எந்த புதிய ஆப்ஷன்களை ஐபோன் யூசர்கள் பயன்படுத்த போகிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

​கான்ட்டேக்ட் ஷேரிங் வசதிடெக் உலகில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, NameDrop அம்சம் இந்த மொபைல்களோடு வெளியாக உள்ளது. இதன்படி, இரண்டு ஐபோன்களை அருகருகே கொண்டு வருவதன் மூலமே நீங்கள் உங்களுக்கு தேவையான கான்ட்டேக்ட் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
​கான்ட்டேக்ட் போஸ்டர்ஸ்இந்த சிறப்பம்சத்தின் மூலமாக நீங்கள் விரும்பும் படியான படங்களை உங்கள் கான்ட்டேக்ட் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு தனி தனியாக தனித்துவமான போஸ்டர்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் அழைப்புகள் வரும் போது எளிதில் யார் என்று கண்டுபிடிக்க உதவும்.
​மெசேஜ் அம்சங்கள்புதிய மெசேஜ் ஆப்ஷன் அப்டேட்டுகள் மூலம் ஐபோன் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும்போது தங்கள் செக்கின் ஸ்டேட்டஸை நண்பர்கள் அல்லது குடும்பத்திற்கு மெசேஜ் வழியாக தெரியப்படுத்த முடியும். நீங்கள் செல்லும் இடத்தை ட்ராக் செய்து நீங்கள் அந்த இடத்தை அடைந்து விட்டீர்களா என்ற அப்டேட்டை இந்த அம்சம் வழங்கும்.
​ஏர்பாட்ஸில் புதிய அம்சம்அடாப்டிவ் ஆடியோ வசதி மூலம் உங்கள் ஏர்பாட்களில் இருந்து வெளியேறும் ஆடியோவை நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். வெளிப்புற இரைச்சலுக்கு ஏற்றவாறு உங்கள் ஏர்பாடிலிருந்து வெளியேறும் சத்தத்தை நீங்கள் மாற்றியமைத்து கொள்ளலாம்.
​ஐபோனில் ஸ்மார்ட் டிஸ்பிளேStandBy மோட் மூலம் ஐபோன் பயனர்கள் தங்களது டிஸ்பிளேவை ஸ்மார்ட் டிஸ்பிளேவாக மாற்றி கொள்ள முடியும். MagSafe அல்லது Qi-enabled சார்ஜிங் ஸ்டாண்டுகளில் இருக்கும் வரை இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே வசதி இருக்குமாறு பயன்படுத்தி கொள்ளலாம். முக்கியமான தகவல்களும் திரையில் தெரியும்படி ஏற்பாடு உள்ளது.
​மனநிலையை ட்ராக் செய்யலாம்ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களில் இடம்பெறப்போகும் இந்த மனநிலையை ட்ராக் செய்யும் ஹெல்த் செயலிகள் மூலம் நீங்கள் உங்களது மனநிலை மாற்றம், சிந்தனைகள் ஆகியவற்றை ஜார்னலிங் செய்ய உதவி செய்யும்.
​AirTag அப்டேட்உங்கள் ஏர்டேக் லொக்கேஷனை எளிமையான முறையில் பிறருக்கு பகிர்வதற்கான அப்டேட்டுகளும் இதில் இடம்பெறலாம். இந்த AirTag டிவைஸை நீங்கள் ஒரு இடத்தில் அல்லது பொருளில் பொறுத்திவிட்டால் பின்னர் அந்த பொருளின் லொக்கேஷனை இது தொடர்ந்து வழங்கி வரும். இதன்மூலம் நீங்கள் உங்கள் தொலைந்த பொருட்களை எளிமையாக கண்டுபிடித்து விடலாம்.
​ஆப்பிள் மியூசிக் அம்சங்கள்ஐபோனில் இடம்பெறும் கொலாபரேட்டிவ் பிளேலிஸ்ட் வசதி மூலம் உங்கள் நண்பர்களோடு இணைந்து பாடல்களை கேட்டு மகிழ முடியும். மேலும், புதிய crossfade அம்சம் கூட பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
​செக்யூரிட்டி மட்டும் பாஸ்வோர்ட்ஸ்ஐபோன்கள் என்றாலே அதன் பாதுகாப்பான செக்யூரிட்டிகாகவே பெயர் போனது. இந்த மொபைலில் இடம்பெறும் செக்யூரிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சத்தின் மூலம் நீங்கள் நம்பத்தகுந்த காண்டேக்ட்டுகளுடன் உங்கள் பாஸ்வோர்டுகளை குழுவாக பகிர்ந்து கொள்ளலாம். அந்த குழுவில் உள்ளவர்கள் மட்டும் அந்த பாஸ்வோர்டுகளை எடிட் செய்து கொள்ளலாம்.
​ஆட்டோகரெக்ட் வசதிiOS அப்டேட்டுடன் ஆட்டோகரெக்ட் ஆப்ஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் ஒரு விஷயத்தை டைப் செய்யும்போதே அதை வேகமாக முன்கணித்து ஆட்டோகரெக்ட் ஆப்ஷன் வழங்கும். இதனால், பெரிய தகவல்களை டைப் செய்வது எளிமையாகி விடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.