"போப் ஆண்டவருக்கு முன்னாடி நீங்க எல்லாம் கால் தூசி".. மோடி, அமித் ஷாவை கிழித்த ஆ. ராசா

சென்னை: போப் ஆண்டவருக்கு முன்னாடி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா எல்லாம் கால் தூசி என்று திமுக எம்.பி. ஆ. ராசா கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ஆ. ராசா ஆவேசம்:சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆதரித்து திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி. ஆ. ராசா நேற்று ஆவேசமாக உரையாற்றினார். அப்போது அவர் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரை நேரடியாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது:
​அமித் ஷாவுக்கு சவால்:நான் அமித் ஷாவிடம் நேருக்கு நேராக கேட்கிறேன். பாஜகவில் எவ்வளவு பெரிய ஆளை வேண்டுமானாலும் இங்கு கூட்டி வாருங்கள். இல்லையா டெல்லியிலேயே வைத்துக் கொள்வோம். ஒரு சபை கூடட்டும். சனாதனத்தை பற்றி நீயும் பேசு, நானும் பேசுகிறேன். இதில் யார் பேசுவது சரி என்று இந்த தேசம் தீர்மானிக்கட்டும். நான் தயார்.. நீங்கள் தயாரா..? உதயநிதி சொன்னது இருக்கட்டும். இப்போது நான் சொல்கிறேன். சனாதனத்தை நாங்க அழித்த காரணத்தால் தான் அமித் ஷா இன்றைக்கு உள்துறை அமைச்சராக இருக்கிறார். இல்லைனா நீ வேற வேலை பாத்துட்டு இருந்துருப்ப.
​விலங்கை விட கொடியவர்கள்:படித்தவனின் அறிவு இந்த சமூகத்திற்கு எதிராக இருக்குமானால், அவன் விலங்கை விட கொடியவன் என அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். அம்பேத்கரே சொல்லிருக்காரு. நான் சொன்னா கோபப்படுவீங்க. அமித் ஷா அவர்களே, மோடி அவர்களே, தமிழிசை அவர்களே உங்கள் அறிவு இந்த சமூகத்திற்கு எதிராக போகக்கூடாது. அப்படி உங்க அறிவு, சமூகத்திற்கு எதிராக தான் போகும் என்றால் அம்பேத்கர் சொன்னதுதான் உங்களுக்கு பொருந்தும்.
​வெட்கமா இல்ல உங்களுக்கு?நாங்க சனாதனத்தை அழித்ததால் தான் தமிழிசை இன்னைக்கு கவர்னர். இல்லைனா வேற வேலைக்கு போயிருக்கணும். நாங்க சனாதனத்தை அழித்ததால்தான் இன்னைக்கு வானதி சீனிவாசன் வக்கீல். நாங்க சனாதனத்தை அழித்ததால் தான் அண்ணாமலை இன்னைக்கு ஆடு மேய்க்காமல் ஐபிஎஸ் ஆயிருக்காரு. நாங்க ஒழிச்ச ஒரு விஷயத்தால் இன்னைக்கு பதவிகளில் அமர்ந்து கொண்டு சனாதனம், சனாதனம்னு கத்துறீங்களே.. வெக்கமா இல்ல உங்களுக்கு? நீங்கள் எல்லாம் படித்தவர்கள்தானே..annamalai speechamit sha shout​மோடியை விட யோக்கியன்:வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்திட்டான், கொடுமைப்படுத்திட்டான்னு இவங்க சொல்றாங்க. நான் சொல்கிறேன். இந்த திறந்தவெளியில் வைத்து சொல்கிறேன். முடிஞ்சா என் மேலே கேஸ் போடு.. மோடியை விட, அமித் ஷாவை விட, பாஜகவில் உள்ள அமைச்சர்களை விட வெள்ளைக்காரன் நாணயமானவன். யோக்கியன். ஏன் சொல்றேனு கேளுங்க. ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் டயர் என்ற வெள்ளைக்காரன், சுதந்திரத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கானோரை ஒரு மைதானத்தில் வைத்து சுட்டுத் தள்ளினான்.
​மன்னிப்பு கேட்ட வெள்ளைக்காரன்:இந்தியாவில் நடந்த மிகப்பெரிய படுகொலை அதுதான். இது நடந்தது 1919-ம் வருடம். அதற்கு பிறகு கிட்டத்தட்ட 100 வருஷம் கழிச்சு 2013-இல் பிரிட்டன் பிரதமர் இந்தியாவுக்கு வருகிறார். ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது, எங்களை மன்னித்துவிடுங்கள் நாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு என மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். நூறு வருஷம் ஆயிருச்சு. ஆனாலும், தன் இனம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிற மனம் வெள்ளைக்காரனிடம் இருந்தது.
​மன்னிப்பு கேட்ட போப்: ​இன்னொரு சம்பவத்தை சொல்லுகிறேன். ஒருகாலத்துல இந்த பூமியை தான் சூரியன் சுற்றி வந்துச்சுனு நம்பிட்டு இருந்தாங்க. பைபிளையும் அப்படித்தான் சொல்லப்பட்டு இருந்தது. அப்போது புருனோ என்ற விஞ்ஞானி, “இல்ல நீங்க சொல்றது தப்பு. சூரியனைதான் பூமி சுத்தி வருதுனு சொன்னான். அவனை அன்றைக்கு அடித்து இழுத்துட்டு போயி ஒரு தேவாலயத்துல வெச்சு உயிரோட எரிச்சு கொன்னாங்க. 600 ஆண்டுகளுக்கு பிறகு போப் ஆண்டவர், புருனோவை எந்த இடத்தில் எரித்தார்களோ, அங்கே சென்று சிலுவையை ஏந்தி உங்களுக்கு இப்படி நடந்தது தவறுதான் என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.
​மணிப்பூர் சம்பவம்:
100 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததற்கு வெள்ளைக்காரன் மன்னிப்பு கேட்கிறான். 600 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததற்கு போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், 200 பேரை கொன்னுட்டு ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நிர்வாணமாக்கி, தொடக்கூடாத இடத்தில் கை வைத்து ஊர்வலமாக நடத்திச் சென்ற சம்பவத்தை நியாயப்படுத்தும் முதலமைச்சர் மணிப்பூரில் இருக்கிறார்.
​நீங்க எல்லாம் கால்தூசி:ஒரு மிருகத்தனமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிற மாநிலத்தின் முதலமைச்சரை அமித் ஷா நாடாளுமன்றத்தில் பாராட்டுகிறார், மோடி பாரட்டுகிறார். மனிதனுக்கு தவறிழைத்து விட்டோமே என வருந்தி பல ஆண்டுகள் கடந்த பிறகும் வந்து மன்னிப்பு கேட்ட வெள்ளைக்காரனா இருக்கட்டும், போப் ஆண்டவரா இருக்கட்டும். அவங்க முன்னாடி நீங்க எல்லாம் கால் தூசி. இவ்வாறு ஆ. ராசா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.