நியூடெல்லி: ஒருநாள் சர்வதேச (ODI) உலகக் கோப்பைகளில் இந்திய கிரிக்கெட்டின் வரலாறு, வெற்றிகள் மற்றும் சவால்களால் குறிக்கப்பட்ட ரோலர்கோஸ்டர் சவாரி என்றே சொல்லலாம். இந்திய அணியின் பல்வேறு கேப்டன்களும் உலக அரங்கில் அணியின் பயணத்திற்கு தங்களுடைய தனித்துவமான பாணியில் பங்களித்த்துள்ளனர். பல்வேறு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டித்தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியினி வெற்றிச் சரிதத்தை எழுதிய புகழ்பெற்ற கேப்டன்கள் இவர்கள்.
1983 இல் கபில்தேவின் வரலாற்று வெற்றியிலிருந்து விராட் கோலியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நவீன சகாப்தம் வரை உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிகள் மற்றும் இந்தியாவுக்காக அதிக உலகக் கோப்பை வெற்றிகளைப் பெற்ற தலைவராக உருவெடுத்த கேப்டன் யார் என்பதை பார்க்கலாம்.
எஸ். வெங்கடராகவன் (1975):
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பெருமையை எஸ்.வெங்கடராகவன் பெற்றார். இந்தப் போட்டியின் போது, இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடியது, ஒரு வெற்றி பெற்று, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்தியாவின் பயணத்தின் தொடங்கிய கேப்டன் எஸ்.வெங்கட்ராகவன். 1979 உலகக் கோப்பை போட்டியிலும் வெங்கடராகவன் தலைமையில் இந்திய அணி, மூன்று போட்டிகளில் எதிலுமே வெற்றி பெற முடியவில்லை.
கபில் தேவ் (1983):
1983 ஆம் ஆண்டில், கபில் தேவ் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார் கபில்தேவ். அவரது தலைமையின் கீழ், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி எட்டு போட்டிகளில் ஆறில் வென்றது, இதில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மறக்கமுடியாத இறுதிப் போட்டியும் அடங்கும், இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாக இன்றுவரை பேசப்படுகிறது.
1987 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தார். இந்தியா வியக்கத்தக்க வகையில் விளையாண்டு, அரையிறுதிக்கு முன்னேறினாம், வெற்றிவாகை சூடவில்லை.