Vijay about Ajith: அஜித்திடம் விஜய்க்கு பிடித்த விஷயங்கள் என்னென்ன தெரியுமா ? அவரே சொல்லியிருக்கார் பாருங்க..!

தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருபவர் தான் அஜித். என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்குவதை மிக முக்கியமாக கருதுகின்றார் அஜித். அதன் காரணமாகத்தான் படத்தில் நடித்து முடித்தவுடன் தன் வேலை முடிந்துவிட்டது என கூறி அடுத்தடுத்த வேலைகளில் இரங்கி வருகின்றார்.

தனக்காக ரசிகர்கள் அவர்களின் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதை விரும்பாத அஜித் தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்றார். மேலும் அஜித் என்று தன்னை அழைத்தால் போதும் வேறெந்த பட்டமும், புனைபெயரும் எனக்கு வேண்டாம் என அறிக்கை விட்டார் அஜித். இவ்வாறு மற்ற நடிகர்கள் எடுக்காத பல முடிவுகளை துணிச்சலாக எடுத்து அஜித் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றார்.

அஜித்திடம் பிடித்த விஷயம்

இந்நிலையில் ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் அஜித்தை வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசித்து வருகின்றனர். அஜித் பார்க்காத வெற்றிகளே இல்லை, அதே போல அவர் சந்திக்காத தோல்விகளும் இல்லை. இருந்தாலும் நாளுக்கு நாள் அவரை நேசிப்பவர்கள் பட்டியல் மட்டும் நீண்டுகொண்டே செல்கின்றது. அந்த வகையில் அவரின் போட்டியாளர் என கருதப்படும் தளபதி விஜய்க்கும் அஜித்தை மிகவும் பிடிக்குமாம்.

vijay in Jawan: ஜவான் திரைப்படத்தில் விஜய் இல்லை..ஆனால்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

என்னதான் இருவரும் போட்டி நடிகர்கள் என தமிழ் சினிமாவாலும், ரசிகர்களாலும் கூறப்பட்டாலும் இருவருக்குள்ளும் நட்பு இருந்து தான் வருகின்றது. ஆனால் ரசிகர்கள் தான் ஓயாமல் சண்டையிட்டு வருகின்றனர். முன்பு நேரடியாக சண்டையிட்டு வந்த ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிப்படையாக பேசிய விஜய்

இருந்தாலும் ஒரு சிலர் அவர்களின் மோதலை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அஜித்தை பற்றி விஜய் புகழ்ந்து பேசிய வீடியோக்களை ஒரு சிலர் எடுத்து எடிட் செய்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அதாவது விஜய் ஒரு சில பேட்டிகளில் தனக்கு அஜித்திடம் பிடித்த விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி பேசியுள்ளார். அதை தான் ரசிகர்களை சிலர் ஷேர் செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த வகையில் அஜித்திடம் விஜய்க்கு அவரது தன்னம்பிக்கையும், மனதில் பட்டதைவெளிப்படையாக பேசும் தன்மையும் மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக அஜித்தின் தன்னம்பிக்கை தான் விஜய்க்கு பிடித்த விஷயமாம். இதனை பல பேட்டிகளில் விஜய் கூறியுள்ளார். இதைத்தான் ஒரு சில ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.