அரசியல்சாசனத்தில் பாரதம் என குறிப்பிடப்பட்டுள்ளது: ஜெய்சங்கர் பதில்| “India that is Bharat is in Constitution,” Jaishankar takes dig at Opposition furore over G20 invite

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய அரசியல்சாசனத்தில் பாரதம் என்ற வார்த்தை உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

‘ஜி- 20’ மாநாட்டுக்கான விருந்து அழைப்பிதழில், ‘தி பிரசிடென்ட் ஆப் இந்தியா’ என குறிப்பிடுவதற்கு பதிலாக, ‘தி பிரசிடென்ட் ஆப் பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘நாட்டின் பெயரை மாற்றுவதற்கு பா.ஜ., முயற்சிக்கிறது’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா என்பது பாரதம். இது அரசியல் சாசனத்தில் உள்ளது. அனைவரும் அதனை படிக்க வேண்டும் என அழைக்கிறேன். பாரதம் என்பதற்கு ஒரு அர்த்தம் உண்டு. புரிதல் உண்டு. அதனைத்தான் அரசியல் சாசனம் எதிரொலிக்கிறது. எதிர்க்கட்சிகள், தங்களது கூட்டணிக்கு ‛ இண்டியா ‘ என பெயர் வைத்துள்ளதால், அரசு நாடகம் ஆடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.