​பிரேசிலை புரட்டிப்போட்ட சூறாவளி – வெளுத்து வாங்கிய கனமழை – 21 பேர் பரிதாப பலி..​

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது நாடுகளில் பிரேசில் முதன்மையான இடத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 65 பேர் உயிரிழந்தனர். ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில், மீண்டும் ஒரு மழை, வெள்ள பேரழிவை சந்தித்துள்ளது பிரேசில்.

புரட்டிப் போட்ட சூறாவளி, பலத்த மழைதெற்கு பிரேசில் பகுதியில் வெப்பமண்டல சுறாவளி காரணமாக தொடர்ந்து அடை மழை பெய்து வருவதோடு அதிவேகமாக காற்றும் வீசி வருகிறது. மேலும், வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தொடர்ந்து காலநிலை பேரழிவுகளை சந்தித்து வரும் சூழலில், அந்த வரிசையில் தற்போதைய பெருமழை வெள்ளமும் இணைந்துள்ளது.வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்புமழையின் காரணமாக பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சூல் மாநிலம் இதுவரை இல்லாத அளவு உயிரிழப்புகளை சந்தித்துள்ளதாக அம்மாநில ஆளுநர் எடுவர்டோ லெட்டியா கூறியுள்ளார். மழை வெள்ளத்தி சிக்கி ஏற்கனவே 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மேலும் 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழைபுயல் சின்னம் நேற்று முன் தினம் தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கையாக 6,000 பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அடுத்த 24 மணி நேரத்தில் மட்டும் ரியோ மாநிலத்தில் சுமார் 300 மிமி மழை கொட்டியுள்ளது. அத்துடன், ஆலங்கட்டி மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் பெருவெள்ளம் சூழந்ததுடன், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூழ்கிய நகரம் – மாடியில் மக்கள் தஞ்சம்டக்வாரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மகும் என்ற 5,000 மக்கள் மட்டுமே வசிக்கும் சிறிய நகரத்தின் 85 சதவிகித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் வீட்டு மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பலரை காணவில்லை என்றும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றூம் மகும் நகர மேயர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தீவிரம்ஒட்டுமொத்தமாக இந்த பெருமழை வெள்ளத்தால் 67 நகரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 52,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ அறிவித்துள்ளார்.
மீண்டும் மீண்டுமா – வானிலை எச்சரிக்கை
இதனிடையே செப்டம்பர் 7 அதாவது நாளை முதல் மேலும் மழை பெய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.