பாரதியனாக இருப்பது பாக்கியம்: தோனி வெளியிட்ட படம் வைரல்| Its a privilege to be bharatiyan: Dhonis picture goes viral

ராஞ்சி: இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவக், பாரத் எனப் பெயர் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியிருந்தார்.

இன்று (செப்.,6) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தனது முகப்பு படத்தை இந்திய கொடியின் பின்னணியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘பாரதியனாக இருப்பது பாக்கியமாக கருதுகிறேன்’ என குறிப்பிட்ட புகைப்படத்தை மாற்றியுள்ளார்.

இதனால் தோனியும் பாரத் பெயருக்கு ஆதரவு அளித்துள்ளதாக அவரது ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.