பிரிட்டனுக்கு பலன் ஏற்பட்டால் மட்டுமே இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ரிஷி சுனக்| Rishi Sunaks Non-Negotiable Condition For Trade Deal With India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: பிரிட்டனுக்கு பலன் ஏற்பட்டால் மட்டுமே, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிரிட்டன், வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதேபோல், பிரிட்டனுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யவும் இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனை தீர்க்க இரு நாடுகளும் தீவிரமாக பேசி வருகின்றன.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் குழுவினர் இந்தியா வர உள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் மத்தியில் ரிஷி சுனக் கூறியதாவது: இந்தியாவுடன் தடையவற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒட்டுமொத்த பிரிட்டனுக்கு பயன் ஏற்பட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.