
சனாதனத்தை மதியுங்கள்: உதயநிதிக்கு குஷ்பு அட்வைஸ்
நடிகராக இருந்து தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “டெங்கு, கொரோனாவை ஒழித்தது போன்று சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. போலீசிலும் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன.
இது தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், “நான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்து இருக்கிறேன். ஆனாலும் மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள். மதியுங்கள், நேசியுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.