Sonia and Bose Venkat : என்னதான் காதல் கல்யாணமா இருந்தாலும், 15 வருஷம் கழிச்சுத்தான் லவ் வந்தது !! சோனியா மற்றும் போஸ் வெங்கட்டின் காதல் கதை !

சோனியா போஸ்தமிழ் மற்றும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சோனியா. இவர் அவரது சிறு வயதிலேயே பல குழந்தை நச்சத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாமல், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகராக அறிமுகமான வில்லன் நடிகரான போஸ் வெங்கட்டை கடந்த 2003இல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது 20வது திருமண தினத்தை கொண்டாடி வருகின்றனர்
போஸ் வெங்கட்தமிழில் சீரியலில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமானார். சீரியலில் அவர் நடிப்பை பார்த்து இயக்குனர் பாரதிராஜா படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன் பின்னர் தமிழ் மற்றும் சில மலையாள படங்களில் நடித்தார் போஸ். நடிகராக மட்டுமல்லாமல், தன்னை இயக்குனராகவும் கன்னி மாடம் என்னும் படத்தின் மூலம் அடையாளம் காட்டினார்.

இவர்களின் காதல் கதைநடிகை சோனியா ஹீரோயினாக நடித்த அதே சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் போஸ் நடித்துக்கொண்டிருந்தார். சோனியா அவரை எப்போதும் கலாய்த்து பேசுவாராம். இவர் என்ன நம்மை மதிப்பதே இல்லை என நினைத்து, தான் நடித்த சீரியலில் தனது காட்சிகளை சோனியா அவர்களுக்கு காட்டி இருக்கிறார் போஸ். அதை பார்த்து, போஸ் நன்றாக நடிக்கிறார், என ஒரு மரியாதை உணர்வு சோனியா அவர்களுக்கு ஏற்பட்டது. அங்கு தொடங்கியது இவர்களின் லவ் ஸ்டோரி.

க்யூட் ப்ரோபோசல்சோனியாவின் இயல்பான குணம் பிடித்துப்போக, அவரின்மீது காதல் கொண்டிருக்கிறார் போஸ். தனது காதலை குறுஞ்செய்தி மூலமாகவே தெரிவித்திருக்கிறார் போஸ். சோனியா எப்போது திருமண என கேட்க, அலைபாயுதே மாதவன் ஸ்டைலில் “ஒல்லியாக, கருப்பாக, கிராமத்திலிருந்து வந்து, ஒன்றுமே தெரியாத, முக்கியமா சினிமாவில் இல்லாத ஒரு பெண்ணை தேடி வருகிறேன், இது அனைத்திற்கும் நேரெதிரான ஒரு பெண்ணை தான் திருமணம் செய்வேன்” என அனுப்ப, சோனியாவிற்கு புரிந்துவிட்டது.
திருமணம்பின்னர் இருவருக்கும் காதல் மலர, திருமணம் குறித்து பேசினார். சோனியா அவர்களின் வீட்டில் அம்மா, தம்பி என அனைவரையும் போஸ் பேசி சம்மதிக்கவைத்தார். போஸ் வீட்டிலும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்க, இருவரும் 2003ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு தேஜஸ்வின், பவதாரிணி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்தங்களது 20வது திருமண நாளை கொண்டாடிவரும் இவர்கள் க்யூட்டான போட்டோஸ் பகிர்ந்து மகிழ்கின்றனர். சோனியா அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில், “வாழ்வில் ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டாட வேண்டும், அது தான் வாழ்க்கை, அது இல்லையென்றால் வேறென்ன இருக்க முடியும். என்னுடைய வாழ்க்கையே மாமா என்ற ஒரு வார்த்தையில் தான் முழுமை அடைகிறது. என்னை மற்றவர்கள் திருமதி சோனியா போஸ் என கூப்பிடும்போது நான் அடையும் பெருமையையும் சந்தோஷத்தையும் அளவிடவே முடியாது. உங்களை திருமணம் செய்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த சரியான முடிவு. நம் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும், நிறைய சண்டை போட்டுள்ளோம் இருந்தாலும் நமக்குள் இருக்கும் காதலும் மரியாதையும் குறைந்ததே இல்லை. ஹாப்பி 20 இயர்ஸ் மாமா. நீங்கள் அதிக உயரத்தை அடைவதை நான் பார்க்கவேண்டும், லவ் யு” என பதிவிட்டிருக்கிறார் சோனியா.

ஆச்சரியமான தகவல்என்னதான் இவர்கள் காதல் திருமண செய்துக்கொண்டாலும், இருவருமே தொடக்க காலத்தில் பெரிய அளவில் காதலை வெளிக்காட்டவில்லையாம். திருமணமாகி, இரண்டு பிள்ளைகளுக்கு பிறகும் தங்களது 15வது திருமண ஆண்டில்தான் இவர்களுக்குள் ரொமான்ஸ் ஆரம்பமானதாம். ஏன் இத்தனை வருடம் காதலை வெளிக்காட்டவில்லை என அப்போது தான் இவர்களின் காதல் வாழ்க்கையே ஆரம்பமாகியதாக சோனியா ஒரு நேர்காணலில் சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.