தீவிரமடையும் பருவமழை… இனிமேதான் ஆட்டமே.. தமிழ்நாடு உட்பட… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

தென் மேற்கு பருவமழை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் வரும் 9 ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பருவமழைநாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் முதல் செப்டம்பர் வரை என 4 மாதங்கள் தென்மேற்கு பருவழை பெய்யும். வழக்கமாக ஜூன் ஒன்றாம் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு தாமதமாக ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை பருவமழையின் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன.வானிலை மையம் அறிவிப்புஆனால் இதுவரை நாடு முழுவதும் போதுமான அளவு பருவமழை பெய்யவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழையின் அளவு மிகவும் குறைவான அளவே பதிவானது. 122 ஆண்டுகளுக்கு பிறகு மிக குறைவான அளவு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
​ உதயநிநி ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம்.. பூதாகரமாகும் ‘சனாதனம்’ பேச்சு!​தீவிரமடையும் பருவமழை
இருப்பினும் செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது. அதன்படியே செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
செப்டம்பர் 9 வரைஇந்நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 8ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ திருப்பதி : விஐபி தரிசனத்தில் சூப்பர் ஆஃபர்: தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!​மிக கனமழை எச்சரிக்கை
இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலும் குஜராத் மாநிலத்தில் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொருத்தவரை, கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் மழைமேலும் கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம், தெலுங்கானா, மற்றும் வட உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இன்று பரவலாக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழையுடன் கூடிய பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
​ தெலுங்கானாவில் இம்முறை காங்கிரஸ் ஆட்சிதான்… அடித்து சொல்லும் உத்தம் குமார் ரெட்டி!​மக்கள் மகிழ்ச்சிசெப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், செப்டம்பர் 5 முதல் 9ஆம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவமழை பற்றாக்குறையாக உள்ள நிலையில் இந்திய வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
​ திருப்பதியில் தமிழக பக்தர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.