Divya Spandana: `திவ்யா ஸ்பந்தனாவிடம் பேசினேன் நலமாக உள்ளார்!' – வதந்திக்கு முற்றுபுள்ளி!

பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் கன்னட பட உலகின் முன்னணி நடிகை திவ்யா ஸ்பந்தனா.

குத்து படத்தின் மூலம் பிரபலாமானதால் குத்து ரம்யா எனவும் அழைக்கப்பட்டார். நடிகை மட்டுமல்லாது அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா, 2012-ல் காங்கிரஸில் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி எம்.பி ஆனார். 2014 லோக்சபா தேர்தலில் தோற்ற பிறகு, 2017-ல் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய திவ்யா ஸ்பந்தனா, பின்னர் சிறிது காலத்திலேயே அந்தப் பதவியிலிருந்தும் விலகினார். சமீபத்தில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

திவ்யா ஸ்பந்தனா

அவர் மாரடைப்பால் காலமானார் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதைப் பலரும் பகிரத் தொடங்கினர்.

இந்நிலையில் சித்ரா சுப்ரமணியம் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் திவ்யா ஸ்பந்தனாவின் மறைவு வதந்தி என்பதை உறுதி செய்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர்” திவ்யா ஸ்பந்தனாவிடம் தற்போது பேசினேன். அவர் நலமாகதான் உள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற அவருடனான சந்திப்பு அற்புதமானது. பெங்களூர் மீதான காதல் உட்பட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.