ஜி 20 மாநாடு
டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாடு நடைபெறுகிறது. இந்த முறை இந்தியாதான் இந்த மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
இந்த மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமான படையை சேர்ந்த போர் விமானங்கள் வான்வழியாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளன.
ஒரு வழியா தேதி குறிச்சாச்சு… நாளை விண்ணில் பாய்கிறது ஜப்பானின் ‘ஸ்லீம்’.. நிலவில் தரையிறங்குவது எப்போது?
நடராஜர் சிலை
இந்நிலையில் ஜி 20 மாநாடு நடைபெறும் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில், 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலை அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பிரகதி மண்டபத்தின் முன்பு பிரமாண்டமாக வீற்றிருக்கும் நடராஜர் சிலை கவனத்தை பெற்று வருகிறது.
தமிழில் டிவீட்
இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் “பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்”என குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை… இனிமேதான் ஆட்டமே.. தமிழ்நாடு உட்பட… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகர்களின் பெருமை
நடராஜர் என்றாலே பலரது நினைவுக்கும் வருவது தில்லை என அழைக்கப்படும் சிதம்பரம்தான். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயம் நடராஜருக்கு உரிய சிறப்பு தலமாகும். இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் உள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நடராஜர் கோவில்கள் உள்ளன. வேலூர் தங்க கோவிலில் மிக உயரமான நடராஜர் சிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் தில்லை நடராஜரை பாரத மண்டபத்தின் முன்பு வைத்து தமிழர்களின் பாரம்பரியத்தை குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.