BGauss C12i escooter – பிகாஸ் C12i எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்

₹ 99,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிகாஸ் C12i EX மற்றும் C12i MAX என இரு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கின்றது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள குறைந்த ரேஞ்சு பெற்ற C12i EX முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்படுகின்றது.

முன்பாக விற்பனையில் உள்ள C12i MAX வேரியண்ட் அதிகபட்சமாக 135 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றியளிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, தற்பொழுது வந்துள்ள C12i EX ரேஞ்சு 85 கிமீ வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

BGAUSS C12i escooter

வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.99,999 விலையில் C12i EX வேரியண்ட் கிடைக்கும். அதன் பிறகு விலை ரூ.1,05,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. C12i EX மாடலில் பொருத்தப்பட்டுள்ள 2kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ பயணிக்கும் திறனுடன் 2500 வாட்ஸ் பவரை வெளிப்படுத்துகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 85 கிமீ பயணிக்கலாம். 0 – 100% சார்ஜிங் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும்.

C12i MAX மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ பயணிக்கும் திறனுடன் 2500 வாட்ஸ் பவரை வெளிப்படுத்துகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 135 கிமீ பயணிக்கலாம். 0 – 100% சார்ஜிங் செய்ய 6 மணி தேவைப்படும்.

இந்நிறுவனம் C12i மாடலுக்கு 3 ஆண்டுகள் அல்லது 36,000 கிமீ உத்தரவாதத்துடன் கூடுதலாக,  உத்தரவாதத்தை 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரை நீட்டிக்கலாம். ஆனால், சிறப்பு தள்ளுபடியாக 5 ஆண்டு வாரண்டி சில வாரங்களுக்கு வழங்கப்படலாம்.

C12i EX விலை ரூ. 99,999/- (எக்ஸ்-ஷோரூம்)
C12i MAX  விலை ரூ. 1,26,153/- (எக்ஸ்-ஷோரூம்)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.