தஞ்சாவூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 15 குவாட்டர் பாட்டில்களை சட்டவிரோதமாக விற்க முயன்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஒரு யூனிட் மணல் கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் கைதான இவர்கள் இருவரும், ஜாமீன் கோரி இரு வேறு மனுக்களாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளங்கோவன், கைதுசெய்யப்பட்ட இருவரும் தலா 5,000 ரூபாய் வீதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இந்த 10 ஆயிரம் ரூபாய் நிதி மூலம் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு சட்டப் புத்தகங்களை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பெயரில் வழங்க, நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை வழக்கில் ஜாமீன் கோரிய முருகேசன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி இளங்கோவன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தீர்ப்பைக் கொண்டு சென்று வழக்கு பதியப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் காட்டி, இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கட்டியும், ஸ்யூரிட்டிக்காக 2 நபர்களின் கையெழுத்தைப் பெற்று நிபந்தனை ஜாமீனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY