சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார். ஆனாலும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், லைகா நிறுவனம் விடாமுயற்சியை தூசி தட்டி வருவதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி ஷூட்டிங் குறித்து லைகா கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
