பூமி, நிலவுடன் செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல்1| Aditya L1 took a selfie with Earth and Moon

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், பூமி மற்றும் நிலவு இருக்கும் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

‘ஆதித்யா- எல்1’ விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., -சி57 ராக்கெட் வாயிலாக கடந்த செப்.,2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம், 125 நாட்கள் பயணம் செய்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்ற பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

latest tamil news

இதன் சுற்றுவட்ட பாதை 2 முறை அதிகரிக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு செப்.,10ம் தேதி உயர்த்தப்பட இருக்கிறது. தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் ஆதித்யா எல்1, பூமி மற்றும் நிலவுடன் செல்பி எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. செப்.,4ம் தேதி இப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.