Google Pixel 8 Pro மூன்று நிறங்கள், மூன்று கேமராக்களோடு புது அப்டேட்ஸ்! டிசைன்களை லீக் செய்த கூகுள்!

அக்டோபர் 4ம் தேதி Google pixel 8 series வெளியாக உள்ளது. முன்னணி மொபைல் நிறுவனங்களான ஆப்பிளின் அடுத்த ஐபோன் 15 மற்றும் சாம்சங் மொபைல்கள் ஆகியவற்றின் டிசைன்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் Google pixel 8 Pro மொபைலின் கசிந்த டிசைன்கள் உள்ளன. ஏற்கனவே ஒரு முறை இதன் டிசைனை வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது மீண்டும் தனது Pixel Phone Simulator தளத்தில் வெளியிட்டதாக இணையவாசிகள் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதன்படி, Google pixel 8 Pro குறித்து வெளியான முந்தைய தகவல்களை விட தற்போது புதிய அப்க்ரேடட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​Google Pixel 8 Pro சிம் ட்ரேபழைய தகவல்களின்படி, Google pixel 8 Pro மாடல் e-sim வசதியோடு மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய கூகுள் லீக் படி, குறைந்தபட்சம் ஒரு சிம் ட்ரே வசதியுடன் இந்த மொபைல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
​Google Pixel 8 Pro இதர தகவல்கள்மேலும், கூகுள் தளம் வழியாக கசிந்துள்ள இமேஜ் மற்றும் தகவலின்படி இதில் வெப்பநிலையை அளவிடும் சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, இதில் உடல் வெப்பநிலையை சோதிக்கும் சிறப்பம்சம் இடம்பெறலாம் என்று டிப்ஸ்டர்கள் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
​Google Pixel 8 சீரிஸ் கேமராகூகுள் வெளியிட்ட படத்தின் அடிப்படையில் அதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டிப்ஸ்டர்கள் வெளியிட்ட தகவலின்படி, அதன் ப்ரோ மாடல்களில் OIS சப்போர்ட்டுடன் 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 64 மெகாபிக்ஸல் அல்ட்ராவைட் சென்ஸார், 48 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ கேமரா ஆகியவையும் இடம்பெறலாம். Google Pixel 8 சீரிஸ் மாடல்களில் 4,950mAh திறன் பேட்டரி மற்றும் 27W வேகமான சார்ஜிங் வசதி மற்றும் 4,485mAh திறன் பேட்டரி with 24W வேகமான சார்ஜிங் வசதி ஆகியவை இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
​ப்ராசஸர் & டிஸ்பிளேகூகுள் கசிய விட்டுள்ள தகவல்களின்படி , கடந்த ஆண்டு வெளியான Google Pixel 7 Pro மாடலில் இருந்தது போலவே Google Pixel 8 Pro மாடலிலும் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. டிப்ஸ்டர்கள் கணிப்பின்படி 6.7 இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
​Google Pixel 8 Pro டிசைன்இணையவாசிகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, Licorice, Porcelain, மற்றும் Sky ஆகிய மூன்று நிறங்களில் Google Pixel 8 Pro மொபைல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், Google Pixel 8 Pro மொபைலில் இ-சிம் மட்டுமே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள டிசைனில் சிம் ட்ரே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.