ஏற்றுமதி வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு வல்லாரைக் கீரை உற்பத்தியை முன்னேற்றும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் அகுரெஸ்;ஸ, மாலிம்பட, அதுரலிய மற்றும் பிடபெத்தர போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வல்லாரைக் கீரை உற்பத்தியாளர்கள் இலங்கையின் ஒரேயொரு மற்றம் முதலாவது சேதன ஏற்றுமதித் தரத்திலான வல்லாரைக் கீரைக் கிராமமான களுத்துறை மில்லனிய சேதன ஏற்றுமதிக் கிராமத்தின் முன்னேற்றம் தொடர்பான மேற்பார்வை விஜயமொன்றை பிரதேச ஏற்றுமதி மற்றும் விவசாய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்போது உற்பத்தி நிலம் பரீட்சித்தல், சேதன உற்பத்தி தொடர்பாக பயனாளிகளுக்கு தெளிவுபடுத்துதல் மற்றும் வல்லாரைக் கீரை உற்பத்தித் தொழிற்சாலையை மேற்பார்வை செய்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வல்லாரைக் கீரை உற்பத்தியாளர்கள், மாத்தறை ஏற்றுமதி அபிவிருத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அகுரஸ்ஸ, மாலிம்பட, அதுரலிய மற்றும் பிடபெத்தர ஆகிய பிரதேசங்களின் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
களுத்துறை மில்லனிய பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமந்திகா விக்கிரமரத்தன, மில்லனிய விவசாய அதிகாரி சம்பத்தின் வழிகாட்டலுக்கு இணங்க இம்மேற்பார்வை நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் அகுரெஸ்ஸ ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தரினால் இவ்விஜயத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.